Read Online in tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

1: அறிமுகம்

நமது உடலை மிக சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் நமது சிறுநீரகங்கள் பேரதிசயத்தக்க விதங்களில் செயல்படுகின்றன. உடலிலிருந்து தேவையற்ற கழிவுப் பொருட்களையும், விஷப் பொருட்களையும் அவை திறன்பட அகற்றுகின்றன. அவற்றுடைய அடிப்படை செயல்பாடானது விஷப் பொருட்களை மட்டுமே அகற்றுவதாக இருந்தாலும், அதை மட்டும் அவை செய்து விட்டு சும்மா இருந்து விடுவதில்லை. சிறுநீரகங்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதிலும், உடலில் இருக்கும் திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்தி வைப்பதிலும்,இரத்தம் மற்றும் திரவியத்தில் கரைந்துள்ள முக்கிய தாதுக்களை கட்டுப்படுத்தி வைப்பதிலும் பெரும் பங்கு எடுத்துக் கொண்டு செயலாற்றுகின்றன. நம்மில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இரண்டு சிறுநீரகங்களோடு பிறந்து விட்ட போதிலும், அவை செய்யும் வேலைகளைச் செய்ய ஒன்றே ஒவ்வொருவருக்கும் போதும்.

அன்மைக்காலங்களில் நீரிழிவு நோயினால் அவதியுறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உயர் இரத்த அழுத்தத்தினால் அவதியுறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மிக மோசமான அளவு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு நோயுறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த நோய்களை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவதர்க்கு வழிவகைகளைச் சொல்வதே இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த புத்தகம் இதைப் படிப்பவருக்கு சிறுநீரக சம்பந்தமான நோய்களை அறிந்து கொள்வது பற்றியும் அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும் எடுத்துச் சொல்கிறது. அடிக்கடி அந்த நோய்கள் பற்றி எழும் கேள்விகளுக்கு ஆங்காங்கே பதில்களும் சொல்லி விடுகிறது.

இந்த புத்தகத்தின் ஆரம்பப் பகுதிகள் நோயாளிகளுக்கு சிறுநீரகங்களைப் பற்றிய அறிமுக விளக்கங்களைச் சொல்ல ஆரம்பிக்கின்றன. சிறுநீரகங்கள் உடலில் மிக முக்கிய உறுப்புகளாகும். அவை சார்ந்த நோய்களைத் தடுக்கும் வழிமுறைகளையும் எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கிறது. நோயாளிகளின் குடும்ப நபர்களுக்கு சிறுநீரக நோய்கள் பற்றிய விளக்கங்கள் இந்த புத்தகத்தில் பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ஆசிரியர்கள் அது நோயாளி பராமரிப்பின் ஒரு முக்கிய பகுதி என்று உணர்கிறார்கள்.

மிக மோசமாகப் பாதிக்கும் சிறுநீரக நோய்களின் ஆரம்ப காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய கவனத்தை வலியுறுத்துகிறது. அறிவார்த்த முறையில் எப்படி அவற்றை அணுகுவது என்பது பற்றியும் ஒருவேளை செயற்கை முறையில் சிறுநீரை அகற்றுவதை ஒத்திப்போடக்கூட செய்யலாமோ என்பது பற்றிய யோசனையையும், ஏன், மாற்று சிறுநீரகங்களைப் பெறுவது பற்றியும் ஆராய்ந்து சொல்கிறது. வெகு விரைவான முறையில் உபயோகமான விவரங்களையும், செயற்கை முறையில் சிறுநீரை அகற்றுவதை பற்றி எடுத்துச் சொல்கிறது. அத்துடன் இறந்த ஒருவரின் சிறுநீரகங்களை எடுத்து உயிருடன் இருந்து அவதிப்படுபவர் ஒருவருக்குப் பொருத்தலாமா என்று கூட ஆராய்கிறது.

சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முழுமையான வழிகாட்டியாக இந்த புத்தகம் இருக்க விரும்புகிறது. அதன் காரணமாக, பொதுவாக ஏற்படும் சிறுநீரக நோய்களைப் பற்றிய விவரங்களையும் , அந்த நோய்களைத் தடுப்பது பற்றிய பயனுள்ள வழிகளையும் சொல்கிறது,நாள்தொறும் நாம் நம்பும் சில கட்டுக்கதைகளும் அதற்கான அறிவியல் உன்மைகளும், பொதுவான மருந்துகளைப் பற்றிய அறிவு விவரங்களையும் தருகிறது.

உணவு என்பது வாழ்க்கையின் ஒரு மிக முக்கிய அங்கமாக இருப்பதாலும், எவருக்கும் அது குழப்பம் மிகுந்த ஒரு அம்சமாக இருப்பதாலும், முக்கியமாக சிறுநீரகங்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு அது பெரும் முக்கியம் வாய்ந்ததாலும், இது பற்றி வெகு அதிக விவரங்களுடன் விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தனி அத்தியாயமே ஒதுக்கப் பட்டிருக்கிறது. நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகளை எடுத்துச் சொல்லி சரியானதும் போதுமானதுமான உணவை எப்படி உட்கொள்ளுவது என்பதை சொல்கிறது.