Read Online in Tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

9: மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுதல்

அக்குட் கிட்னி ஃபெயிலியர்

மேலே சொன்ன பெயரில் வழங்கப் படும் சிறுநீரக செயலிழப்பை எவ்வாறு விளக்கலாம்?

இவ்வகை சிறுநீரக நோயின் தாக்குதலால், சிறுநீரகங்களின் திறன் குறைந்தோ அல்லது முற்றிலுமாக இழப்போ வெகு குறைந்த காலத்திற்குள் ஏற்பட்டு விடுகிறது. (ஒரு சில மணி நேரங்கள், நாட்கள் அல்லது வாரங்களுக்குள்) அது ஏற்பட்டு விடுகிறது. இது தற்காலிகமானதும் அல்லது நிரந்தரமானதும் ஆக இருக்கலாம்.

இது எப்படி ஏற்படுகிறது.

இது பல காரணங்களினால் உருவாகலாம். மிக முக்கியமான காரணங்கள் கீழ்க்கண்டவை போல இருக்கும்.

  1. சிறுநீரகங்களுக்குப் போகும் இரத்தம் குறைவாக இருக்கும். வயிற்றுப் போக்கினால் கடைமையாக நீர் வற்றிப் போய் இருக்கும்.
  2. படு மோசமான தொற்றும், அனுவை சிகிச்சை ஒன்றிற்குப் பிறகு மிக மோசமாக நோயுறுவதுமாகும்.
  3. சிறுநீர் கழிப்பதில் திடீரென்று தடங்கல் ஏற்படும். பெரும்பாலும் இதற்குக் காரணம் சிறுநீரகத்தில் அடைப்பட்டிருக்கும் கல் காரணமாக இருக்கும்.
  4. மற்றவை Falciparum malaria, leptospirosis, snake bite, certain kidney diseases, (பெக்ஷியர்ம மலேரியா, லெப்டோஸ்பைரோசிஸ், ஸ்னேக் பைட், சர்டென் கிட்னி டிசீஸஸ்) கார்ப்ப கால சிக்கல்கள் மற்றும் சில மருந்துகளின் பக்க விளைவுகளினால் ஏற்படக் கூடியவை ஆகும்.

மிக மோசமாக தாக்கும் சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்

மேற்கண்ட நோய்கள் தாக்கும்போது, சிறுநீரகத்தின் செயல்பாடு, வெகு குறுகிய காலத்திலேயே மிக மோசமாக ஆரம்பிக்கிறது. இதனால் கழிவுப் பொருட்கள் மிக அதிகமாக உடலிலேயே தங்கி விடுகின்றன. உடலில் இருக்கும் திரவங்களில் சமநிலை பிறழ்கிறது. மின்சாரத்தைக் கடத்தும் திரவங்களின் சமநிலை கெடுகிறது. இதனால் சிறுநீரகங்கள் திடீரென்று செயலிழக்கின்றன. இதனால் அறிகுறிகளும் குறிப்பான சில தடயங்களும் செயலிழக்கின்றன. வெகு விரைவில் உருவாகின்றன.

இந்த பாதிப்பின் தீவிரம் ஒரு நோயாளிக்கும் மற்றவருக்கும் சற்று வேறுபட்ட நிலைகளில் காணப்படப் படும்.

  1. அடிப்படையாக உடலில் உள்ளார்ந்து இருக்கும் சில நிலைகளும் இவற்றில் காணப்படும். (வயிற்றுப் போக்கு, இரத்தம் இழப்பு, காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல் முதலியன.)
  2. சிறுநீர் குறைவாகப் போக ஆரம்பித்தல். (ஒரு சிலருக்கு இன்னும் சாதாரண அளவிலேயே கூடப் போகக் கொண்டிருக்கும்.) திரவங்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுதல், தோல் பட்டையின் அடுக்கு வீக்கத்தைக் கொண்டு வரும். அல்லது பாதங்களிலும் அப்படி ஆகும். எடையும் கூடும்.
  3. பசியின்மையும், வாந்தி ஏற்படுதலும், விக்கலும், உடல் அசதியும், சோம்பல் மேலிடுவதும், மற்றும் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுவதும் போன்ற நிலைகள் ஏற்படும்.
  4. மிக மோசமானதும் உயிருக்கே ஆபத்து என்ற அறிகுறிகள் தென்படலாம் - மூச்சுத் திணறல், மார்பில் வலி, நடுக்கங்கள் அல்லது நிலைஇழத்தல், இரத்தமாக வாந்தி ஏற்படுதல், மற்றும் இதயத் துடிப்புகள் தாறு மாறான வயத்தில் துடித்தல், (இது பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருந்தால் இருக்கும்.) போன்றவையாகும்.
  5. இந்த நோய் தாக்கப்படும் ஆரம்ப காலத்தில், ஒருசில நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறியும் தென்பட மாட்டா. நோயை ஏதோ விபத்துப் போல திடீரென்று சோதித்து அறியலாம். இது வழக்கமான இரத்த பரிசோதனைகள் ஒன்றின்போது தெரியவரும்.

இந்த நோயைக் கண்டறிவது எப்படி?

எத்தனையோ நோயாளிகளை இந்த நோய் தாக்கும்போது எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் போகலாம். ஆகவே மோசமாக சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்யும் இந்த நோய் தாக்கும்போது, அல்லது மிகச் சிறிய அளவு சந்தேகம் ஏற்பட்டாலும், உடனுக்குடன் சோதனை செய்து கொள்வது மிக நலம்.

இந்த நோயின் தாக்கம், இரத்த பரிசோதனைகளில் தெரிய வரும். (இரத்த யூரியாவின் மற்றும் கிரியேட்டினின் அளவு கூடும்.) அதைத் தவிர வெளிச் செல்லும் சிறுநீரின் அளவு, சிறுநீர் பரிசோதனை மற்றும் ஒலிக்கு அப்பால் எழுப்பப் படும் அலைவுகளைக் கொண்டு சோதித்தல் என்பவை சில சோதனைகளாகும். மற்றும் இவ்வகை நோயாளிகளின் முழு உடல்நலத்தைப் பற்றிய சிந்திரம் படித்து அறியப் பட வேண்டும். நிரம்ப இத்தகு சோதனைகள் உள்ள.

இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை செய்வது?

முறையான சிகிச்சைகள் மூலம் இந்த நோயை முற்றிலுமாகவே குணப்படுத்தி விடலாம் இது பெரும்பாலான நோயாளிகளுக்கு சாதகமாகி இருக்கிறது. கால தாமதமும் முறையில்லாத சிகிச்சையும் உயிருக்கே உலை வைக்கும்.

முக்கியமான வழிகளில் சில

  1. சிறுநீரக செயல்பாட்டை சரியாக்குதல்
  2. மருந்து, மாத்திரைகளும் இன்னும் சில உபரியான ஆதரவு தரும் வழி முறைகள்.
  3. உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுதல்
  4. டயாலிசிஸ்

1. சிறுநீரக செயல்பாட்டை சரியாக்குதல்

  • அடிப்படை காரணத்தைக் கண்டறிவது என்பது மிக முக்கியமான வழிமுறையாகும்.
  • உயர் இரத்த அழுத்தம், தொற்றுதல் ஏற்படுவது, சிறுநீர் பாதை தடைப் படுவது, - இவற்றை முதலில் சரி செய்வது சிறுநீரகங்களை சாதாரண நிலைக்கு உடனடியாகத் திரும்பச் செய்யும்.
  • இவ்வகை சிகிச்சைகள், நோயை மேலும் முற்றாமல் பாது காக்கிறது. சொல்ப காலத்திலேயே சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்கிறது.

2. மருந்தும், மாத்திரைகளும்,

இன்னும் சில பக்க உதவிகளும்.

  • சிறுநீரகங்களை சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்வதே முக்கிய இலக்காகும். அப்படிச் செய்யும் முயற்சி முற்றிலுமாக நலிவடையச் செய்யாமல் தடுக்கச் செய்யும்
  • தொற்றுக்களை குணப்படுத்த வேண்டும். அத்துடன் தீவிர பக்க விளைவுகள், விஷத்தன்மை கொண்ட மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். (NSAIDS போன்றவை)
  • Frusemide போன்ற மருந்துகள் சிறுநீர் அளவைக் கூட்டும். உடலில் வீக்கங்களைக் குறைக்கும். மூச்சுத் திணறலையும் இல்லாமல் செய்யும்.
  • பக்க ஆதரவு தரும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தாழ் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் இவற்றை சரி செய்யும். வாந்தி ஏற்படுவதை நிறுத்தும். இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்கும். உடலில் ஏற்படும் நடுக்கத்தையும் குறைக்கும்.

3. உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றிய அறிவுறை

  • முறையானதும் கட்டுப்பாடு உடைய உணவுப் பழக்க வழக்கங்கள், அறிகுறிகளை அகற்றி, மற்றும் சிக்கல்கள் கூடாமல் செய்து இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
  • அன்றாடம் எடுத்துக் கொள்ளப் படும் திரவங்களின் அளவு முறையாக கீர்ப்படுத்தப் பட வேண்டும். வெளிச் செல்லும் சிறுநீரின் அளவை மனதில் கொண்டு இதை திட்டமிட்டுச் செயல்படுத்தல் வேண்டும். வழக்கமாக எடைமானமும், மூச்சுத் திணறல் போன்றவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பொட்டாசியத்தின் அளவு மிகுதியாக இருக்கும் பழங்களைத் தவிர்க்கவும். உதாரணத்திற்கு, பழங்கள், பழச்சாறுகள், உலர்ந்த பழங்கள் முதலியனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை ஆங்கிலத்தில் hyperkalemia என்பார்கள். இந்த தாக்கம் வந்தால் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வரும் சிக்கலாகும்.
  • உப்பைக் குறைக்கவும். உப்பைக் குறைத்தால், தாகம், எடைமா மற்றும் உயர் இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்
  • போதுமான அளவு சத்துள்ள உணவையும் தேவைப் படும் கலோரிகளுக்கு ஏற் செய்யும் உணவையும் எடுத்துக் கொள்ளவும்.

4. டயாலிசிஸ்
(சிறுநீரை செயற்கையாக வெளியேற்றுதல்)

மிக மோசமான நிலையில் தாக்கப் பட்டிருக்கும் சிறுநீரகங்களை உடையவர்களுக்கு சில காலம், தற்காலிகமாக சிறுநீரகங்களின் வேலையைச் செய்வதற்கு இந்த சிகிச்சை மிகவும் உதவும்.

டயாலிசிஸ் என்றால் என்ன?

சிறுநீரகங்கள் சரியாக இருக்கும்போது செய்யும் வேலையை (நோயாளி கடைமையாக பாதிக்கப் பட்டிருக்கும்போது), இயந்திரத்தின் மூலமாக செயற்கை முறையில் சிறு நீரை வெளியே அகற்றுவதுதான் டயாலிசிஸின் வேலை.

கழிவுப் பொருட்களை இது அகற்றுகிறது, திரவங்கள் உபரியாக இருந்தால் அவற்றை அகற்றுகிறது, அசிடோனிலை சரி செய்கிறது. மற்றும் மின் கடத்தும் திரவங்களின் சமநிலையில்லாத நிலையை கூட சரி செய்கிறது.

டயாலிசிஸ் இரு வகைப்படும். ஒன்றின் பெயர் haemo dialysis மற்றதின் பெயர் peritoneal dialysis. இவைதான் ஆங்கிலத்தில் அவை அழைக்கப் படும் பெயர்கள்.

மிக மோசமாக தாக்கும் சிறுநீரக நோயில் எப்போது டயாலிசிஸ் தேவைப் படும்.?

ஒரு சில நோயாளிகளுக்கு, நோய் வந்து கடைமையாகத் தாக்கும்போது வேண்டி இருக்கும். போதுமான அளவு நோயைக் குணப்படுத்தும் வழிகளை அனுசரித்தாலும், இவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளும், சிக்கல்களும் அதிகமாக இருக்கின்றனவோ அப்போது டயாலிசிஸ் தேவைப்படும். அதுவே ஆரோக்கி யத்தை சீராக வைக்க உதவும். பொருக்க முடியாத திரவங்களின் அளவு சேர்க்கை, கட்டுப்படுத்த முடியாத ஹைப்பர்க்ளேமியா, மிகக் கடைமையான அசிடோனில் போன்ற நிலைகளில் டயாலிசிஸை செயல்படுத்தும்போது காணப்படும்.

டயாலிசிஸை எத்தனை நாட்களுக்குத் தொடர வேண்டும்?

  • மிக மோசமாக பாதிக்கப் பட்ட சிறுநீரகங்களைக் கொண்ட வர்களுக்கு டயாலிசிஸை தற்காலிகமாக செயல்படுத்தல் வேண்டும். இருவகைகளில் ஏதாவது ஒன்றை செயல்படுத்தலாம். இதை சிறுநீரகங்கள் சாதாரண நிலையமைக்குத் திரும்பும் வரை மேற்கொள்ளலாம்.
  • மேற்கண்ட வகையில் தாக்க மடைந்தவர்கள், சில சமயங்களில் 1 முதல் 4 வாரங்களில் சாதாரண நிலைக்குத் திரும்பி விடுவார்கள். அதுவரை டயாலிசிஸ் தேவைப் படும்.
  • டயாலிசிஸ் என்பது ஒரு முறை மேற்கொண்டால் வாழ்க்கை முழுவதும் அனுசரிக்க வேண்டிய செயல்பாடு அது என்ற அனுமானம் தவறானது. அந்த அனுமானத்தால் காலம் தாழ்த்திக் கொண்டே போவது உயிருக்கே உலை வைக்கும்.

மிக மோசமாக சிறுநீரகங்கள் தாக்கப் பட்டதை அடுத்து அவை செயலிழந்ததும் அதைத் தடுப்பதும் எப்படி?

  • இந்த தாக்குதலை அதன் உள்ளார்ந்த நிலையிலேயே விரைவிலேயே கண்டு கொண்டு சிகிச்சை செய்வதும், அடிக்கடி சோதித்து கண்டறிவதும் தடுக்கும் வழிகளில் ஒன்றாகும்.
  • உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதும் உடனுக்குடன் இரத்த அழுத்தத்தை சரி செய்வதுகொள்வதும் இரண்டாவது வழியாகும்.
  • சில வகை மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது இவற்றை ஆங்கிலத்தில் Nephrafonic என்று சொல்வார். தொற்றுநையும், குறைவாக சிறுநீர் கழிதலையும் உடனுக்குடன் சரி செய்யவும்.