சிறுநீரக நோய்கள் பற்றிய கட்டுக்கதைகளும், உண்மை நிலைகளும்
கட்டுக்கதை: சிறுநீரக நோய்கள் எல்லாமே மிகவும் தீவிரமானவை.
உண்மை: இல்லை. எல்லா சிறுநீரக நோய்களும் தீவிரமானவை அல்ல. விரைவாகச் செயல்பட்டால், மற்றும் சிகிச்சையை உடனுக்குடன் மேற்கொண்டால், எத்தனையோ சிறுநீரக நோய்கள் குணப்படுத்தப்படலாம். பெரும்பாலானவற்றில், நோய் குணமாவது வேண்டுமானால் கால தாமதம் ஏற்படலாம் அல்லது தடுக்கப்படலாம்.
கட்டுக்கதை: ஒரே ஒரு சிறுநீரகம் செயலிழப்பதால், சிறுநீரகமே செயலிழந்து விடும்.
உண்மை: இல்லை. சிறுநீரகம் முழுவதுமாகச் செயலிழப்பது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பதால்தான். வழக்கமாக, ஒரே ஒரு சிறுநீரகம் செயலிழப்பதால் நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படுவதில்லை. இம்மாதிரியான சமயங்களில், இரத்தத்தில் இருக்கும் யூரியாவின் அளவும், சீரம் கிரியேட்டினைனின் அளவும் இருக்கவேண்டிய அளவே இருக்கின்றன. ஆனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டால், கழிவுப் பொருட்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுகின்றன. இரத்தத்தில் சேரும் யூரியாவின் அளவு கூடுகிறது. சீரம் கிரியேட்டினைனின் அளவும் கூடி, சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என்பதைக் காட்டுகின்றன.
கட்டுக்கதை: பல சோதனைகளின் பொழுது "இடீமா (முகம் அல்லது கை கால் வீக்கம்)" இருப்பது தெரிய வந்தால், சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என்று அர்த்தம்.
உண்மை: ஒரு சில நேரங்களில், இடீமா எனும் வீக்கம் இருப்பது தெரியவரும். ஆனால் சிறுநீரகங்களின் செயல் முழுவதும் மிகச் சாதாரணமாக இருக்கலாம். சிறுநீரகத்தைத் தாக்கும் ஒரு நோய் வகையில் இது தெரியலாம். .
கட்டுக்கதை: சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்போதுதெல்லாம் இடீமா எனும் நிலை தாக்கும்.
உண்மை: இல்லை. ஒரு சில தாக்கங்களில் இடீமா சேர்வது இயற்கை. இது பெரும்பாலான நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் நிச்சயமாக 100
க்கு 100 என்ற கணக்கில் இது ஏற்படுவதில்லை. மிக மோசமாக முற்றிய நிலையிலும் ஒரு சிலருக்கு இது ஏற்படுவதில்லை. ஆகவே இம்மாற்றம் இல்லை என்ற காரணத்தால் சிறுநீரகங்கள் பழுதாகவில்லை என்று அர்த்தமில்லை.
கட்டுக்கதை: சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் எல்லோருமே நிரம்ப நீர் பருக வேண்டும்.
உண்மை: இல்லை. வீக்கம் ஏற்பட்ட பிறகு வெளி வரும் சிறுநீரின் அளவு குறைவாகவே இருக்கும். இது பல சிறுநீரகக் கோளாறுகளின் ஒரு அம்சம். இம்மாதிரியான நோயாளிகளுக்கு குடிக்கும் நீரை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. சிறுநீரக நோய்கள் இருப்பவர்களுக்கு உடலுக்குள் இருக்கும் நீரை ஓரளவு சமநிலைப்படுத்தி வைப்பது அவசியம். இருந்தாலும், கற்கள் இருந்து அவதிப்படும் நோயாளிகள் மற்றும் சிறுநீர்ப் பாதையில் தொற்று உள்ளவர்கள், அத்துடன் சிறுநீரகங்கள் பழுதடையாதவர்கள் நீரை நிரம்பவே குடிக்க வேண்டும்.
கட்டுக்கதை: நான் சுகமாகவும் நலமாகவுமே இருக்கிறேன். ஆகவே எனக்கு சிறுநீரகப் பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன்.
உண்மை: நோயாளிகளில் அனேகருக்கு சிறுநீர்ப் பிரச்சனை இல்லாதது போலவே நோயின் ஆரம்ப காலங்களில் தெரியும். சோதனைச் சாலைகளில் எடுக்கப் பட்ட சோதனைகளில் மிக மோசமான நிலை இருப்பதற்கான தடயங்கள் தென்பட்டாலே இவற்றை உணர முடியும்.
கட்டுக்கதை: நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே சிறுநீரகப் பிரச்சனைகளுக்காக நான் எந்த வித சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியதில்லை.
உண்மை: CKD மிக மோசமான அளவில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்கள் கூட நன்றாக இருப்பதாகவே உணர்கிறார்கள். முறையான மருத்துவம் தொடரும் நிலையில் அப்படி உணர்வதால், மருத்துவ சிகிச்சையை நிறுத்தி விடுகிறார்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும் இல்லாமல் தொடங்கிறார்கள். அப்படி மருத்துவத்தை ஒரே மடியாக நிறுத்துவது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாகும். சிறுநீரக பாதிப்பு மென்மேலும் அதிசீக்கிரம் மோசமாகக் கூடும். மிகக் குறைந்த நாட்களிலேயே இத்தகைய நோயாளிகள், அவசரம் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் நிலைக்குப் போய் விடுவார்கள்.
அர்த்தம். இது நோயின் முடிவு நிலையையே காட்டுகிறது இந்த நிலையில் நோயாளியை வெறும் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை போய் விடுகிறது. இந்த நிலையில் அனேக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் தேவைப் படுகிறது.
கட்டுக்கதை: என்னுடைய சீரம் கிரியேட்டினைனின் அளவு சராசரிக்கு சற்று உயர்வாக இருக்கிறது. ஆனால் நான் சுகமாகவே இருப்பதாக உணர்கிறேன். ஆகவே எனக்கு இக் கால கட்டத்தில் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.
உண்மை: சீரம் கிரியேட்டினைனின் அளவு மிகக் குறைந்த அளவே கூடினாலும் சிறுநீரகப் பாதிப்பு ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். எத்தனையோ வகையான சிறுநீரக பாதிப்புகள் சிறுநீரகங்களைப் பாதிக்கலாம். ஆகவே சிறுநீரக நோய்களைக் கவனிக்கும் சிறப்பு மருத்துவரை (Nephrologist) உடனடியாகக் கண்டு ஆலோசனை கேட்பது அவசியம். நோயின் பல்வேறு நிலைகளில் மேற்கண்ட திரவத்தின் சற்று அதிகமான நிலையை நாம் புரிந்து கொள்வோமாக. அதிலும் மிக மோசமாகத் தாக்கப்படும் நிலைகளின் ஆரம்பத்தில் கண்டறிவோமாக.
அப்படிப்பட்ட மிக மோசமான நிலைகளில் கூட எந்தவித தடயங்களையும் தெளிவாக அல்லது துல்லியமாக எடுத்துக் காட்டுவதில்லை. நோயின் அடிப்படைக் காரணம் சீரம் கிரியேட்டினைனின் அதிகமாகிவிட்ட அளவு ஒன்றாக இருக்கலாம். அதன் அளவு 1.6 மி.கி./டெசி லிட்டர் என்பதே சிறுநீரகங்களின் செயல்பாடு 50 சதவீதத்திற்கும் மேலாக பழுது பட்டிருக்கிறது என்று அர்த்தம். இது மிகவும் குறிப்பிடத்தக்க அளவு பழுதைக் காண்பிக்கிறது. நோயை ஆரம்ப காலங்களிலேயே கண்டறிந்து கொள்வதும் உடனடியாக மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்வதும் மிகுந்த பயனை அளிக்கும். அதனால் மேலும் நெடுநாட்களுக்கு சிறுநீரகங்கள் பழுதாகாமல் தொடரும்.
சீரம் கிரியேட்டினைனின் அளவு 5.0 மி.கி. / டெசி லிட்டராக இருக்கும்போது, சிறுநீரகங்களின் திறன் 80 சதவீதத்திற்கும் மேல் குறைந்து விட்டது அல்லது இழந்து விட்டது என்று அர்த்தம். முறையான மருத்துவத்தை இந்த நிலையிலாவது தொடரவேண்டும். அது சிறுநீரகங்களை ஓரளவு பாதுகாக்கும்.
சீரம் கிரியேட்டினைனின் அளவு 10.00 மி.கி. / டெசி லிட்டராக இருக்கும்போது, சிறுநீரகங்களின் திறன் 90 சதவீதம் இழந்து விட்டது என்று அர்த்தம் . இந்த நிலயில் அனெக நொயாளிகளுக்கு டயாலிசிச் உதவி தேவைபடுகிறது.
கட்டுக்கதை: எனக்கு டயாலிசிஸ் என்று ஆரம்பிக்கப்படுகிறதோ அப்புறம் அதைக் கைவிடவே முடியாது. அதுவே தொடர வேண்டும்.
உண்மை: இல்லை. எந்த அளவுக்கு டயாலிசிஸ் வேண்டும் என்பது குறிப்பட்ட நோயாளியின் நிலையைப் பொறுத்தது
மிக மோசமான பாதிப்பு என்பது தாற்காலிகமானதும், சாதாரண நிலைக்குத் திரும்பக் கூடிய வாய்ப்பையும் உடையதாக இருக்கும். மிக மோசமாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்குமே டயாலிசிஸ் அவசியம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு மிகக் குறுகிய காலமே டயாலிசிஸ் செய்தால் போதும். முறையான சிகிச்சையோடும் ஒரு சில சமயங்களே செய்து முடித்தவுடனும் சிறுநீரகங்கள் அனேகமாக சாதாரண நிலைக்குத் திரும்ப விடுகின்றன. நீண்ட நாட்கள் தொடர வேண்டுமோ என்ற பயத்தில் டயாலிசிஸை ஆரம்பிக்காமல் இருப்பதுதான் அபாயம். ஏன் உயிருக்கும் ஆபத்தும் கூட.
மிக மோசமான பாதிப்புடைய நோய் (chronic kidney disease) என்பது சாதாரண நிலைக்குத் திரும்ப முடியாததும், தொடர்ந்து மோசமாகிக் கொண்டே போகும் தன்மையை உடையதாகும்
கட்டுக்கதை: டயாலிசிஸ் எனும் சிகிச்சை சிறுநீரகங்களின் செயலிழப்பைத் தடுத்து குணப்படுத்துகிறது.
உண்மை: இல்லை. டயாலிசிஸ் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதைக் குணப்படுத்துவதில்லை. ஆனால் அது உயிரைக் காக்கும் ஒரு சிகிச்சை. உடலில் உருவாகும் வீண் பொருட்களை அது அகற்றுகிறது. உபரியாக நின்று விடும் நீரையும் வெளியே எடுக்கிறது. மின் கடத்தும் திரவப் பொருட்களின் சமநிலையைப் பாதுகாக்கிறது. அத்துடன் அமிலங்கள், காரங்கள் இவற்றிற்கு இருக்க வேண்டிய சமநிலை பாதிப்புகளை சரி செய்கிறது. சிறுநீரகங்கள் செயலிழந்து போய் செய்யாமல் போய் விட்ட செயல்களையே டயாலிசிஸ் சிகிச்சை செய்கிறது. தங்கி விட்ட சிறுநீரின் அடையாளங்கள் எதுவுமில்லாமல், உடலை சாதாரண சீர்நிலைக்குத் திருப்ப அல்லது மாற்று சிறுநீரகங்கள் பொருத்த வேண்டிய நிலைக்குப் போய் விடுவார்கள்.
கட்டுக்கதை: மாற்றுச் சிறுநீரகங்கள் பொருத்துவதற்கு ஆணோ, பெண்ணோ தன் சிறுநீரகங்களில் ஒன்றை மாற்றுப் பாலில் உள்ள ஒருவருக்கு அதாவது பெண் ஆணுக்கோ அல்லது ஆண் பெண்ணுக்கோ கொடுக்க முடியாது.
உண்மை: இது தவறு. ஆணோ பெண்ணோ எதிர்ப்பாலில் இருக்கும் ஒருவருக்கு சிறுநீரகம் ஒன்றைக்கொடுக்கலாம்.
இரு பாலாருக்கும் சிறுநீரகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றே.
கட்டுக்கதை: சிறுநீரகத்தில் ஒன்றை பிறருக்குக் கொடுத்து உதவுவதால் ஆரோக்கியமும் பாலியல் ஈடுபாடும் குறையும்.
உண்மை: சிறுநீரகத்தின் செயல்பாடு மாறுவதே இல்லை. ஆரோக்கியமோ மற்றும் பாலியல் ஈடுபாட்டிலோ குறைவு இருக்காது. அப்படி சிறுநீரகங்களைத் தானமாகக் கொடுத்தவர்கள், வெகு சாதாரணமான வாழ்க்கையையே தொடர்ந்து வாழ்வார்கள். இதில் பாலியல் ஈடுபாடோ அல்லது குழந்தைகள் பெறுவதோ எதிலும் குறைபாடு ஏற்படுவதில்லை.
கட்டுக்கதை: சிறுநீரகம் தேவைப் படும்போது, ஒரு சிறுநீரகத்தை வெளிச்சந்தையில் காசு கொடுத்து வாங்க முடியும்.
உண்மை: சிறுநீரகங்களை வணிக ரீதியாக வாங்குவதோ விற்பதோ தண்டிக்கப்பட வேண்டிய ஒரு குற்றம். சிறுநீரகத்தைக் கொடுக்க முன்வருபவர் பொருத்தப்பட வேண்டியவருக்குச் சொந்தமாகவும், அந்த சிறுநீரகம் பின்வருவதற்கு மருத்துவ ரீதியாக "பொருத்துவதாகவும்" இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த சிறுநீரகத்தை பின்வரின் உடல் "உதிர்த்துத்" தள்ளக் கூடிய அபாயம் இருக்கிறது.
கட்டுக்கதை: இப்போது என் இரத்த அழுத்தம் சாதாரண நிலையில் இருக்கிறது. ஆகவே நான் உயர் இரத்த அழுத்தத்திற்காக எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டியதில்லை. நான் அதற்கு எதிர் விளைவு கொடுக்கும் மாத்திரைகளை விழுங்காமல் இருந்தால் உடல் சரியாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே நான் மருந்துகளைத் தான் ஏன் உட்கொள்ள வேண்டும்?
உண்மை: இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டவுடன், அப்படி மருந்து சாப்பிட்டு வந்தவர்கள் நிறுத்தவே செய்கிறார்கள். அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தின் அடையாளங்கள் அற்று விட்டதால் அப்படிச் செய்கிறார்கள். ஆனால் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக நின்று கொல்லும் நோய். இது நாளடைவில் முற்றிப் போய்க் கொல்லும். இரத்தத்தைப் பாதிக்கச் செய்து கொல்லும். சிறுநீரகங்களைப் பாதிக்கும். ஆகவே உடலின் மிக முக்கியமான அங்கங்களைப் பாதுகாப்பதற்கு முறையாகவும் சரியான இடைவெளிகள் பார்த்து மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்து இரத்த அழுத்தத்தை சீராக ஒரே எல்லைக்குள் வைத்தே ஆகவேண்டும். மாற்று அடையாளங்கள் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி அப்படியே சரி அல்லது குறிப்பட்ட நபருக்கு சரியாக இருப்பதாகத் தோன்றினாலும் அப்படியே செய்து கொண்டு வரல் வேண்டும்.
கட்டுக்கதை: ஆண்களுக்கு மாத்திரமே சிறுநீரகங்கள் இருக்கின்றன. அது கால்களுக்கு இடையில் உள்ள ஒரு பை போன்ற அமைப்பில் இருக்கிறது.
உண்மை: ஆணோ, பெண்ணோ அடி வயிற்றின் மேற்புறத்தில் அதே அளவிலும் வடிவமைப்பிலும் செயல்பாட்டோடும் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆண்களுக்கு பிறப்புறுப்புகள் கால்களுக்கு இடையில் இருக்கும் பை போன்ற அமைப்பில் வைக்கப் பட்டிருக்கின்றன.