Read Online in Tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

11: நீண்ட நாள்பட்ட சிறுநீர் நோய் அறிகுறிகளும் சிகிச்சையும்

நீண்ட நாட்கள் வந்து தாக்கும் நோய்: அறிகுறிகளும் பரிசோதனைகளால் நோயைக் கண்டறிதலும்.

நீண்ட நாட்கள் வந்து தாக்கும் நோயால் சிறுநீரகங்கள் மெல்ல மெல்லவே செயலிழக்கின்றன. இது ஏற்பட்ட பல மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக உடலும் அதற்கு ஏற்ப இசைந்துகொண்டு வாழ்கிறது. இக்காரணங்களால், நீண்ட நாட்கள் இந்த நோயின் தாக்கம் உடையவர்களுக்கு வெளிப்படையாக எந்தவித அறிகுறிகளும் தென்படுவதில்லை. ஆனால் அதற்குள் சிறுநீரகங்கள் நன்றாகப் பழுதாகிவிடுகின்றன.

சிறுநீரகங்கள் எத்தனையோ செயல்பாடுகளைச் செய்கின்றன. ஆகவே வெளியாகும் நோயின் அறிகுறிகள், நோயின் தீவிரத்தையும் பொறுத்து தாக்கும் காரணத்தையும் வீரியத்தையும் பொறுத்ததாக அமைகின்றன. இது ஒவ்வொரு நோயாளிக்கும் வித விதமாக இருக்கும்.

நீண்ட நாட்கள் வந்து தாக்கும் நோயின் அறிகுறிகள் யாவை?

நோயின் தீவிரத்தைப் பொறுத்தே அறிகுறிகள் காணப்படும். சரியாகப் புரிந்து கொள்வதற்கு இந்த நீண்ட நாள் தாக்கும் நோய் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறது. அது இரத்தத்தில் இருந்து Glomerular Filtration rate எனப்படும் அளவீட்டைக் கொண்டு அது வகைப்படுத்தப்படும். இரத்தப் பரிசோதனையின் பொருட்டு இரத்தத்தில் இருக்கும் கிரியேட்டினின் மதிப்பை வைத்து மதிப்பிடலாம். GFR Test என்பது மிகவும் துல்லியமாக அளந்து சொல்லும் சோதனை ஆகும்.

சாதாரணமாக அதன் மதிப்பு 90 மி.லி. / நிமிடம் ஆக இருக்கும்.

Stage GFR
Stage 1: Normal GFR > 90 ml/min
Stage 2: Mild CKD 60-89 ml/min
Stage 3: Moderate CKD 30-59 ml/min
Stage 4: Severe CKD 15-29 ml/min
Stage 5: End Stage CKD <15 ml/min

முதல் நிலை. (சிறுநீரகத்தின் செயல்பாடு 90-100%)

அறிகுறிகள் இல்லாமல் வரும் இந்த நோயின் ஆரம்ப காலங்களில் சிறுநீரகங்கள் பழுதடைவதில்லை. (சீரம் கிரியேட்டினின் சாதாரண நிலையிலேயே இருப்பதாகக் காணப்படும்.) இந்த நிலையில் வழக்கமாக எடுக்கப்படும் சோதனைச் சாலை பரிசோதனைகளின் மூலமே இது கண்டறியப்படும். அல்லது பிற நோய்களுக்காக எடுக்கப்படும் சோதனைகளின் பொருட்டு தற்செயலாக இந்தப் பரிசோதனையும் செய்து கண்டறியலாம். நோயின் இந்த நிலைக்கு ஒரு சிறு தகவல் எடுத்துச்சொல்லும் வகையில் இருக்கக் கூடியது, சிறுநீரில் புரோட்டீன் வெளியேற்றம் ஆகும். எக்ஸ்ரே மூலம் பார்த்தால் சிறுநீரகம் பழுதுபட்டிருப்பது தெரியும். அதை MRI OR CT யிலும் பார்க்கலாம். அல்லது குடும்ப மருத்துவ வரலாற்றுப் பின்னணியை வைத்து அனுமானிக்கலாம். அந்த சரித்திரத்தில் polycystic kidney disease பற்றி என்ன தெரிகிறது என்று பார்க்கலாம்.

இரண்டாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 60-89%)

மிதமான தாக்கமே உடைய நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படமாட்டா. ஆனால் இரண்டாவது இந்த நிலைக்கு nocturia, இரத்த அழுத்தம் அதிகமாக இருத்தல், சிறுநீரின் அசாதாரண நிலை, மற்றும் சீரம் கிரியேட்டினின் சற்றே கூடிய அளவு போன்றவை இந்த நோயை எடுத்துக்காட்டும்.

மூன்றாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 30-59%)

மிதமான தாக்குதல். நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறியும் தென்படாமலேயே இருக்கும். அல்லது அடையாளங்கள் சற்று தெளிவாக இருக்காது. மிதமாக இருக்கும். அவற்றுடன் சிறுநீரில் ஒரு சில அசாதாரண படிவங்களைக் காணலாம். சீரம் கிரியேட்டினின் அளவு மிக அதிகமாக இருக்கும்.

நான்காவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 15-29%)

இது கொஞ்சம் தீவிரம். இந்த நிலையில் பலதரப்பட்ட அறிகுறிகள் தென்படும். மிதமான அடையாளங்களிலிருந்து, தெளிவற்ற நிலையில் இருந்து (எந்த வித குறிப்புகள் இல்லாத அடையாளங்களும் காணப்படும்.) மிக மோசமான அடையாளங்கள் வரை காணப்படும். பெரும்பாலும் தாக்கத்தின் அடிப்படை காரணங்களால் வெளிப்படும். இதர நோய்களின் வீரியத்தாலும் இந்த அடையாளங்கள் தெரியவரும்.

ஐந்தாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 15% க்கும் குறைவு)

மிக மோசமாகத் தாக்கப்பட்ட அல்லது முடிவான தாக்கமுடைய நிலை என்று சொல்லலாம். இப்பொழுது பல தரப்பட்ட அறிகுறிகள் தென்படும். மிதமான நிலையிலிருந்து, மிக மோசமான அறிகுறிகள் வரை எல்லாம் தெரியவரும். ஏன் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தைக் காட்டும் அடையாளங்களும் இருக்கும் இந்த நிலையில் தீவிர மருத்துவ கவனம் இருந்தாலும், நோயாளிகள் அடைந்துவிட்ட மோசமான நிலையை வெளிப்படுத்துவார்கள்.

ஒரு சிறுநீரக டயாலிசிஸ் செய்தேயாகவேண்டிய நிலை காணப்படும்.

சிறுநீரக நோய்களைக் காண வைக்கும் மிகப் பொதுவான அறிகுறிகளாவன:

  • பசியின்மை , வாந்தி எடுத்தல்
  • நலிவான உடல்நிலையும், எளிதாக வலி உண்டாதலும், எடை குறைதலுமாகும்.
  • கால்களின் கீழ் பாகங்களில் வீக்கம் காணப்படுதல், அல்லது கைகளிலோ முகத்தில் கண்களைச் சுற்றி வீக்கம் காணப்படுதல்.
  • உயர் இரத்த அழுத்தம், அதிலும் இள வயதில் அல்லது கட்டுக்குள் அடங்காத வகையில் இருக்கும் அதிக இரத்த அழுத்தம்.
  • இரத்த சோகையினால் வரும் நிலை இது குறைந்து போய்விட்ட எரித்ரோபொய்ட்டினின் உற்பத்தியால் வருவது
  • தூக்கமின்றி தவித்தல், மனம் ஒன்றி வேலை செய்வதில் தடங்கல்கள், மற்றும் மயக்க நிலை.
  • அரிப்பு எடுத்தல், தசைப்பிடிப்பு, அல்லது பலவீனம் கூடிய கால்கள், மனம் ஒன்றி வேலை செய்வதில் தடங்கல்கள் போன்றவை.
  • விலா எலும்புகளுக்குக் கீழே முதுகு வலி
  • வழக்கத்திற்கு மாறாக அதிக தடவை இரவில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு
  • எலும்பில் வலியும் வயதானவர்களுக்கு எலும்பு முறிவும் குழந்தைகளுக்கு தடைப்பட்ட வளர்ச்சியும். சிறுநீரகங்கள் உற்பத்தி செய்யும் வைட்டமின் 'டி' இன் அளவு குழந்தைகளுக்குக் குறைவாக இருப்பது.
  • பாலியல் இன்பத்தில் நாட்டமில்லாமல் இருத்தல். ஆண்குறி விறைப்புடன் இல்லாமை. பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சனைகள் ஏற்படுதல்
  • சிறுநீரக நோய்களுடன் இருதய நோய்களால் வரும் இறப்புக்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.

ஒருவருக்கு நீண்ட நாள்பட்ட இந்த நோய் இருக்கிறதா என்பதை உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒருவர் மீது நோய்க்காக எப்பொழுது சந்தேகப்படுவது./ உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒருவரை எப்பொழுது சந்தேகப்பட வேண்டுமென்றால்?

  • அவருடைய வயது 30 க்குக் குறைவாகவோ அல்லது 50 க்கு அதிகமாகவோ, இருந்தால்
  • இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தால் (அதாவது 200/120 க்கும் அதிகமாக இருந்தால்)
  • கட்டுக்குள்ளேயே அடங்காத இரத்த அழுத்தம் - முறையான மருத்துவத்தின் மூலமும் அடங்காத நிலை
  • இரத்த அழுத்தத்தால் வரும் கண்பார்வைக் கோளாறுகள் சிறுநீரில் புரோட்டீன் இருப்பது
  • உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் இந்த நோயோடு நெருங்கிய சம்பந்தம் உடையது. விக்கங்கள் ஏற்படுவதும், பசியின்மை, மற்றும் உடல் நலிவாகப் போவதாக உள்ளது

என்னென்ன சிக்கல்கள் உருவாக சாத்தியக் கூறுகள் உள்ளன?

அதாவது இந்த நோயின் மிக மோசமாக முற்றிய நிலையில் அப்படி ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் என்னென்ன?

மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக சிறுநீரகங்கள் செயலிழப்பது உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். அதிலும் நுரையீரல்களின் பாதிப்பினால், (pulmonary edema) (புல்மனி எடிமா) அதிலும் உயர் இரத்த அழுத்தம் இருத்தல். உள்ளார்ந்த சிக்கல்கள் கீழ்க்கண்டவையாக இருக்கலாம்.

  • மூச்சு விடுதலில் மிகவும் சிரமம். திரவங்களின் உள்சேர்ப்பினால் மார்பில் வலி. வெகு வெகு அதிகமான இரத்த அழுத்தம்.
  • மோசமாக வாந்தி எடுத்தல்
  • மிகவும் அசதியால் தாக்கப்படுதல்
  • மைய நரம்பு மண்டலம் தாக்கப்படுதல் குழப்பம், மற்றும் தூக்கம் மேலிடுதல், மற்றும் படைபடைப்பும் கோமா நிலையை அடைதல்
  • இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருத்தல். (hyperkalemia) இது இருதயத்தைப் பாதிக்கும் மற்றும் உயிருக்கே ஆபத்தைக் காண்பிக்கும்.
  • இருதயத்தைச் சுற்றி இருக்கும் மிக மெல்லிய உறை வீங்கி விடுதல் Pericarditis எனப்படும் நோய்.

இந்த நோயின் நீண்ட நாள் நிலைக்குப் பிறகு ஒரு நோயாளி எப்பொழுது டாக்டரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்?

நோயாளி உடனுக்குடன் டாக்டரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

  • எந்தவித விளக்கமும் கொடுக்க முடியாமல், மிக வேகமாக எடை கூடினால், சிறுநீரின் கன அளவில் திடீரென்று குறைவு, மூச்சு விடுதலில் சிரமம், முக்கியமாக படுக்கையில் படுத்திருக்கும்போது மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுதல்.
  • மார்பில் வலி, மிகக் குறைவான நிலையில் இருதய துடிப்பு அல்லது மிக அதிகமான வேகத்தில் துடித்தல்.
  • காய்ச்சல், மிக மோசமாக வயிற்றுப் போக்கு, பசியே சிறிதளவு கூட இல்லாமல் போதல், மிக மோசமாக வாந்தி எடுத்தல், வாந்தி எடுத்த பொருட்களோடு இரத்தமும் காணப்படுதல், அல்லது எந்தவித விளக்கமும் கொடுக்கப்பட முடியாமல் எடை கூடுதல்.
  • தசை வலிகள் அதிகமாக உணரப்படுதல்.
  • குழப்பம், மயக்கம் அல்லது உடல் படைபடைப்பு இவை கூடுதல்.
  • சம்ப காலம் வரை முறையாக கட்டுப்படுத்தப்பட்ட இரத்த அழுத்தம், மோசமான நிலைக்குப் போதல்.
  • சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளிப்படுதல். அல்லது மிக அதிகமாக இரத்தம் சேர்ந்து வெளிப்படுதல்.