Read Online in Tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

17: ஓரே சிறுநீரகத்துடன் வாழ்வது எப்படி

ஒரே சிறுநீரகத்தோடு வாழ்தல்

ஒரே சிறுநீரகத்தோடு வாழ்வது ஒரு பிரச்சினை மிகுந்த வாழ்க்கையே; ஆனால் ஒரு சில எச்சரிக்கைகளுடனும் ஆரோக்கியமான வாழ்க்கை வழிமுறைகளுடனும் கையாண்டு எவரும் சாதாரண வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாம்.

அத்தகைய ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் யாவை? ஏன்?

அநேகமாக இந்த உலகில் எந்த ஒரு மனிதரும் இரண்டு சிறுநீரகங்களுடன் தான் பிறக்கிறார்கள். ஆனால் இதே உபயோக சக்தி இருப்பதால், ஒரே ஒரு சிறுநீரகமே தன் முழு சக்தியால் உடலுக்கு வேண்டிய செயல்பாடுகளை தானே செய்யலாம். அதாவது இரண்டு சிறுநீரகங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளைச் செய்யலாம். ஆகவே ஒரே ஒரு சிறுநீரகமே தனக்கு இருப்பதைப் பற்றி எவரும் கவலைப்பட வேண்டியதில்லை. சாதாரண வாழ்க்கையையே மேற்கொண்டு, பாலியல் இன்பங்களையும் உணர்ந்து கொண்டு அல்லது கடினமான வேலைகளில் ஈடுபட்டு வாழ்ந்து வரலாம் சாதாரண வாழ்க்கைக்கு ஒரே ஒரு சிறுநீரகமே போதும். வாழ்க்கை முழுவதையும் மிகுந்த உடலுழைப்புடனும் கூட வாழ்ந்து வரலாம். வேறு ஏதோ காரணத்திற்காக எடுக்கப்படும் கதிரியக்க சோதனைகளினால் ஒரே ஒரு சிறுநீரகமே இருப்பது தெரிய வரலாம். ஒரு விபத்துப் போல தெரிய வரலாம். ஒரே ஒரு சிறுநீரகத்தோடு வாழ்பவர் ஒரு சிலருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு. வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள சில குறைகளாவன:

அவை உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரோட்டீன் குறைதல், போன்றவை தோன்றும். சிறுநீரகத்தின் செயல்பாடு குறைவது வெகு வெகு அபூர்வமாகவே இருக்கும்.

ஒரே ஒரு சிறுநீரகமே உருவாவதின் காரணங்கள் யாவை?

மூன்று சாதாரண அல்லது பொதுவான குழுக்களில் அப்படி ஏற்படலாம். அவை -

  1. பிறப்பிலேயே அப்படி ஏற்படலாம்
  2. அடுத்த சிறுநீரகம் அறுவை சிகிச்சையால் என்றைக்கோ அகற்றப்பட்டிருக்கலாம். கற்கள் உருவானதோ அல்லது புற்று நோயோ அல்லது தைலமோ அல்லது சில கோளத்துக் கொள்வதோ அல்லது வலி மிகுந்த காயமோ - இவற்றால் ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
  3. ஒரு சிறுநீரகத்தை அவர் தானம் செய்திருக்கலாம்.

பிறப்பிலிருந்தே ஒரே ஒரு சிறுநீரகத்தோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் எப்படி ஏற்படுகிறது?

எத்தனையோ நபர்களுக்கு ஒரே ஒரு சிறுநீரகத்தோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. 750-க்கு 1 என்ற விகிதத்தில் பிறப்பிலிருந்தே இப்படிவாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்த ஒரு விசேஷமாக ஆண்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. பொதுவாகவே இடது புற சிறுநீரகமே இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

ஒரே ஒரு சிறுநீரகத்தோடு வாழ்பவர்கள் என்னென்ன முன்னெச்சரிக்கைகளைக் கைக்கொள்ளுதல் வேண்டும்?

  • அத்தகையோருக்கு எந்தவித தனிப் பிரச்சனையும் கிடையாது. இரு சக்கரங்கள் கொண்ட நாற்காலி கொண்ட வண்டியுடன் வாழ்க்கையை வாழ்ந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான். அவரே உபயோகத்திற்காக இன்னொரு நாற்காலி வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்தால் எப்படி இருக்கும் - அப்படித்தான்.
  • இரண்டாவது சிறுநீரகத்தை மிகுந்த சிரமத்துடன் எந்தவித காயமும் விபத்தும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். பாக்சிங், ஹாக்கி,கால்பந்து மல்யுத்தப் போட்டிகள் மற்றும் குத்துச் சண்டைகள் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபாடு கூடவே கூடாது.
  • கற்கள் உருவாகும் நோயை முறையான சிகிச்சைகள் மூலம் தடுத்தோ அல்லது கட்டுப்படுத்தவோ வேண்டும்; அதே போல் சிறுநீர் செல்லும் வழியில் ஏற்படும் நோயைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
  • எந்த ஒரு புது சிகிச்சையையும் ஆரம்பிக்கும் முன் அல்லது அடிவயிற்றில் எந்த அறுவை சிகிச்சையை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் வெளிப்படையாக உங்களுக்கு ஒரே ஒரு சிறுநீரகமே உள்ளது என்பதைச் சொல்லி விடுங்கள்.
  • இரத்த அழுத்தத்தின் மீது ஒரு கட்டுப்பாடு, முறையானதும் இடைவிடாதுமாக தேகப்பயிற்சி, ஆரோக்கியமான சமச்சீரான உணவு, மற்றும் வலி நிவாரணிகளை தவிர்த்து வாழும் வாழ்க்கை. புரோட்டீன் மிக அதிகமாக உள்ள உணவை தவிர்க்கவும். அப்படி மருத்துவர் அறிவுரை சொன்னால். அன்றாடம் சேரும் உப்பைச் குறைக்கவும்-
  • முறையாக அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும். ஒரே சிறுநீரகத்தை வைத்துக் கொண்டு வாழும் ஒருவருக்கு முதல் முதலானதும் தலையாய அறிவுரை இதுதான் - அடிக்கடி மருத்துவ பரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள். இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதித்துப் பார்த்து சிறுநீரகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை கண்டு வாருங்கள். அதே போல் வருடத்திற்கு ஒரு முறை சிறுநீரகம் இரத்தத்தையும் சோதித்து வாருங்கள். முறையான மருத்துவ சோதனைகளே சிறுநீரக பிரச்சனைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிய உதவும். அல்லது சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்தால், அதைக் காட்டிக் கொடுக்கும். ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பிரச்சனைகளைக் கண்டு முறியடித்துக் கொள்வது, சரியான சமயத்தில் சிகிச்சைக்கு உதவுகிறது. மற்றும் சிறுநீரகத்தின் மீது நோயின் ஆரம்ப நிலையிலேயே கவனம் கொள்ள வைக்கிறது.

ஒரே சிறுநீரகத்தை வைத்துக் கொண்டு இருக்கும் நோயாளி மருத்துவரை எப்பொழுது நாடவோ அல்லது தொடர்பு கொள்ளவோ செய்ய வேண்டும்?

  • கீழ்க்கண்ட நிலைகளில் அவர் தொடர்பு கொள்ளுதல் அவசியம்.
  • திடீரென்றும் முழுவதுமாகவும் சிறுநீர் கழிப்பது நின்று போதல்.
  • தனியாக நின்றும் சிறுநீரகம் பெரிதாக ஆகி விட்டதுமான ஒரே சிறுநீரகத்திற்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால்
  • வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது சோதனைக்கு எக்ஸ்-ரே சோதனை மூலம் முடிவுகள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
  • காய்ச்சல், சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் அல்லது சிவப்பாக சிறுநீர் கழித்தல்